ஆங்கில படங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் அங்கும் இங்கும் வெளி வரும் காலம் இது. ஏற்கனவே spider man superman எல்லாம் தமிழில் பேசி்க்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் technical சமாச்சாரம் எல்லாம் இங்கு வேகாது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களை (Hollywood)
என் அண்ணன் மகன் (7வயது) சித்தப்பா இதெல்லாம் graphics
என்று போகிற போக்கில் சொல்லி விட்டு போவான்.
அந்த அளவில் நமது மீடியா நம்மை பழக்க படுத்தி வைத்து இருக்கிறது.இந்த நிலையில் தமிழ் படங்களின் graphics எல்லாம்
கொசுக்கடி மாதிரிதான் நமக்கு....
ஆனால் தசாவதாரத்தில் நிறைய காட்சிகளில் ஒவ்வொரு frame லிம் குறைந்தபட்சம் 3 கமல் வருகிறார்கள்.நமக்கு எந்த இடத்திலும் உறுத்தவில்லை.கமலின் உழைப்பு அசாதாரணமாக இருக்கிறது.
ஒரு fiction படத்திற்கே உரிய எல்லா logic மீறல்களும்
இந்தப்படத்திலும் உண்டு.
இந்தப்படத்தின் மிக அற்புதமான விஷயம், கமல் என்கிற மகா நடிகனின் மிகச்சிறந்த நடிப்பு..பாத்திரங்களின் உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தும் nativity யுடன்
கமல் நடிப்பில் ஒரு genius என்பது தெளிவாகிறது.
குறிப்பிட்டு சொல்வதாயின் பல்ராம் நாய்டு..
அந்த கண்களே எல்லாவற்றையும் பேசிவிடுகிறது..
யாருய்ய்யா அது லைட்டெல்லாம் ஆப் பண்ணது
இங்க என்ன first night ஆ நடக்குது
என்று தொடங்கி, படம் முழுவதும் தெலுங்கரை நம் கண்முன் நிறுத்துகிறார்..பழம்பெரும் நடிகர் பாலையாவை பார்த்ததுபோன்று
ஒரு உணர்வு..
யார்ராப்பா.. இதென்ன செல்போனா என்ன இப்டி வீங்கி
இரு்க்கு
பானை பெருசில்லையா..இன்னும் கொஞ்சம் கொட்டு..
ஆமா சார் பாக்க நீங்க தீவிரவாதி மாதிரியே இருக்கீங்க சார்
இப்படி ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு voice modulation, gesture, style என எல்லாம்...
நடிகர் கமலுக்கு நிச்சயம் இது ஒரு மைல்கல்..
camera வை பொறுத்தவரை lightings match பண்ணுவது
பெரிய வேலையாய் இருந்திருக்கும்..
சினிமாக்காரர்கள் அரசியலில் நுழைவது போலவே சமுக ஆர்வலர்கள் கமல் சமுதாயப்பார்வை குறித்து நிறைய கேள்விகள் எழுப்புகின்றனர்....
அதுகுறித்து இன்னொரு முறை....
Tuesday, August 12, 2008
Subscribe to:
Posts (Atom)