Tuesday, June 24, 2008

எல்லாக் குழந்தைகளுக்கும்
எல்லா பொம்மைகளையும்
பிடித்துப் போவது இல்லை....

ஒரு சில பொம்மைகள் மட்டும்
பிடித்து போவதாய் நம்புகின்றன...

பிடித்து போவதாலேயே
கெஞ்சி கேட்டு அழுது கடைசியில்
பெற்றுவிடுகின்றன பொம்மைகளை...

என்றைக்கேனும் யாரும் பார்க்காத
அலமாரிக்கடியிலோ கட்டிலுக்கு பின்னாலோ
யாரும் கேட்பாரற்று கிடக்கும் பொம்மைகள்..

அடுத்த குழந்தையோ
பொம்மையோ வரும்வரை.....

நிறை - 11 மாத நிழற்படங்கள்