Wednesday, October 8, 2008

ORIGINAL SIN...

நெஞ்சு நிறைய வன்மம் நிறைந்திருக்கிறது...
மனம் அடிப்பட்ட புலியைப்போல
நான்குசுவருக்குள் மோதி அலைகிறது..நீ சொல்லும்
வார்த்தைகள் எவையையும் மனம் நம்ப மறுக்கிறது..
நீ பேசிக்கொண்டிருக்கும் போதே
உன் சொற்களுக்கு பற்கள் முளைத்து நகங்களால்
என்னை கிழித்துக்கொண்டிருக்கின்றன..
உனது பொய்களுக்கு என் சிறிய மனம்
சுக்கு நுாறாய் சிதைந்து போயிருக்கிறது...
முட்டாளாக்கப்படுகிறேனோ என
அச்சமாயிருக்கிறது...மிக லாவகமாய்
உனது சிரிப்பினால் என்னை ஏதும் செய்ய
இயலாதவனாக்கி விடுகிறாய்....

1 comment:

Jayanthi said...

arunmozhi,migavum arumai, niraya edhirparkiren, manam enru mudhalilaye kuripitapin meendum meendum en, . vikatan.ku anupu, nereya dhadavai solliyachu,idha blogspot reference potu anupina innum nalarukum illaya, unake theriyum,naan solla vendiyadhilla