சில வகை உணவுகளை நாம் சாப்பிடக்கூட தேவையில்லை.நினைத்துப்பார்த்தாலே நமது நாவின் நுனியில் ஈரம் கோர்த்துக்கொள்ளும்.உணவுகளைப் பொறுத்தவரை மற்ற எல்லாவற்றையும் போல செய்பவரின் ஆர்வமும் அக்கறையும் பொறுத்தது.கடலைமிட்டாயில் தொடங்கி கறி உருண்டைக்குழம்பு வரை அதற்கதற்கென ஒவ்வோர் தனி மணம், பதம், texture,
சரி இப்போது கதைக்கு வருவோம்...
கருவாட்டு மோலி
நான்கு துண்டு கருவாடு (சதுர கடலைமிட்டய் அளவு)
கண்டிப்பாக இது வஞ்சிரமாகத்தான் இருக்க வேண்டும்..(கேரளம் தென் தமிழகங்களில் இதன் பெயர் நெய்மீன்)
பெரிய வெங்காயம் நான்கு (பொடியாக அரிந்து கொள்ளவும்)
பச்சை மிளகாய் அய்ந்து( நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்)
பூண்டு ஒன்று (பொடியாக அரிந்து
கொள்ளவும்)
தக்காளி பெரியது நான்கு (பொடியாக அரிந்து கொள்ளவும்)
தேங்காய் அரை (மய்ய அரைத்துக்கொள்ளவும்)
மஞ்சள் துாள், கொத்தமல்லி கறிவேப்பிலை
வாணலில் எண்ணை (ஒரு குழி கரண்டி) விட்டு கருவாடு துண்டுகளை போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். கருவாடு துண்டுகள் உரு தெரியாமல் சிதைந்து போகும்.(கருவாடு சிதையாமல் இருந்தால் அது நல்ல கருவாடு இல்லை )
வெங்காயம்,பச்சை மிளகாய்,பூண்டு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கி கருவாட்டுடன் ஒட்டிக்கொண்டு பொன்னிறமாகும்(சே.. வேற வார்த்தையே இல்லையா...)வரை வதக்கவும்...
தக்காளி, மஞ்சள் துாள்,உப்பு(சிறிதளவு சேர்த்தால் போதும் கருவாட்டிலேயே உப்பு இருக்கும்) இவற்றை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
அந்த வாசனைதான் appetizer....
அரைத்த தேங்காயை அதன் தலையில் கொட்டவும்... கிளறி விடவும்...
கொத்தமல்லி கறிவேப்பிலை துாவி இறக்கவும்...
சூடான சற்று குழைந்த சோறுடன் சாப்பிட்டால்...ஒன்றும் சொல்வதற்கில்லை... வாணல் பத்திரம்...
Wednesday, September 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னா தலைவா சாப்பாட்ல முதல் பதிவே அசைவத்திற்கு போயிட்டீங்க..
கொஞ்சம் வைசம் சம்பந்தமாகவும் சில குறிப்புகள் பதிவு பண்ணா எங்கள மாதிரி ஆட்களுக்கு பயன்படும்qq
படிக்கும்போதே சாப்பிட்ட மாதிரி இருந்தது.
Post a Comment